அக்கா வீட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:54 IST)
காதல் திருமணம் செய்த அக்காவை பார்க்க பெற்றோர்கள் தடை விதித்ததால் மனவருத்தத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சேலத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் அதில் இரண்டாவது மகள் நளினி என்பவர் வீட்டை விட்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டுவிட்டார்
 
இந்த நிலையில் மூன்றாவது மகள் பிரியங்கா தனது அக்காவைப் பார்க்க விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு பெற்றோர்கள் அனுமதி அளிக்காமல் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அக்காவை பார்க்க பெற்றோர் தடை விதித்ததால் மன வருத்தத்தில் இருந்த பிரியங்கா திடீரென மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் 
 
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்