கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது தான் போதைப்பொருள் குறித்த தகவல் தெரிய வந்ததாகவும், செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதை பொருள் மொத்தம் 6.2 கிலோ இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப்பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.