1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது.. சென்னையில் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 29 ஜூலை 2024 (15:55 IST)
சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றதாக 1500 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது ஆசிரியர்களை முன்கூட்டியே கைது செய்வது ஜனநாயக விரோதம் என்றும் கடந்த முறை 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது 12 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தொடக்க கல்வி இயக்குனர் உறுதி அளித்தார், ஆனால் இன்று வரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

எனவேதான் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளோம்’ என்று தெரிவித்தனர். எங்கள் கோரிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்