ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்; முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:26 IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
 
மேலும் ரூ.32 கோடி மதிப்பில் விடுதிகள், சமுதாயக் கூடங்களை திறந்து வைத்ததுடன் ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
 
அதுமட்டுமின்றி நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ மூலம் ₹10 கோடி மானியத்துடன் கடன் உதவி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
 
அதேபோல் தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் இருளர் பழங்குடியினருக்கு 943 புதிய வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
 
மேலும் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 776 பயனாளிகளுக்கு ரூ.62 கோடி மதிப்பிலான  உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்