ஓய்வு பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:38 IST)
ஓய்வு பெற்ற எம்எல்ஏவுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் சட்ட முன்வடிவு வரும் திங்கட்கிழமை சட்ட சபையில் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஓய்வு பெற்ற  எம்எல்ஏகளுக்கான ஓய்வூதியம் பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும் அது குறித்து முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் இன்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார் 
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வு பெற்ற எம்எல்ஏக்களின் ஓய்வு ஊதியம் ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் இது குறித்த சட்ட முன்வடிவு வரும் திங்கட்கிழமை சட்டசபை கூடும் போது அன்றைய தினம் இயற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஓய்வுபெற்ற எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்