முழுமையாக மீள்கிறது சென்னை: போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (07:42 IST)
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதன் காரணமாக மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை நகரம் முழுமையாக மாறுகிறது என்றும் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையில் உள்ள 22 சுரங்க பாதைகளில் தற்போது 18 சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு சுரங்கப்பாதைகள் இன்று போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் மீதமுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் நாளைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்