சென்னையில் குடியரசு தின விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2017 (11:01 IST)
குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்று  வந்தன. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் போராட்டகாரர்கள் நிரந்தர சட்டம்  வேண்டும் என்று கூறி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
இதையடுத்து போலீஸார் நேற்று, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வன்முறையில் முடிந்தது. காவல்துறையினரே எல்லை மீறும் சம்பவங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் அனைத்து போராட்டக்காரர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இதனால் மேலும் வன்முறைகள் நடக்காமல் இருக்க சென்னையின் முக்கிய பகுதிகளான மெரினா விவேகானந்தர் இல்லம்,  ஹேமில்டன் பிரிட்ஜ், வடபழனி, பட்டினப்பாக்கம், அவ்வை சண்முகம் சாலை, எல்டாம்ஸ் ரோடு, மவுன்ட்ரோடு, திருவல்லிக்கேணி பாரதி சாலை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணிக்காக 7 ஆயிரம் தமிழக அதிரடிப்படை போலீஸார்  குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, நகரின் அனைத்து புறநகர்ப்பகுதிகளிலும் ரோந்து போலீஸார் கண்காணிப்பில் தொடர்ச்சியாக  ஈடுபட்டு உள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வரும்  குடியரசு தின விழாவை கருப்பு நாளாக அனுசரிக்க பெரும்பாலானோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்