தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை மையம்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:02 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அம்மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏற்கனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்