தமிழகத்தில் இளம் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு சினிமாவின் தாக்கமே காரணம் என பெரும்பாலான வெப்துனியா வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக, தமிழகத்தில் பெண்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆசிட் வீசுவது, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களை தூண்டுவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என்ற வன்முறை வெறியாட்டங்கள் தலை விரித்தாடுகிறது. இதில் சில இளம் பெண்கள் தற்கொலை செய்து தங்கள் இன்னுயுரையும் இழந்துள்ளனர்.
முக்கியமாக, காதலை ஏற்கவில்லை என்பதற்காகவும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சில சமயம் அது கொலை செய்யும் அளவுக்கும் போகிறது. சமீபத்தில் கூட சுவாதி என்ற இளம்பெண், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்த்தில் ஒரு வாலிபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
எனவே, காதலை ஏற்கவில்லை என்பதற்காக பெண்களை இளைஞர்கள் கொலை செய்வதற்கு காரணம் என்பதை முன்வைத்து, வாசகர்களின் கருத்தை நமது வெப்துனியா இணையதளத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு, 52.24 சதவீதம் பேர் சினிமாவின் தாக்கம்தான் என்றும், 18.97 சதவீதம் பேர், சமூக வலைதளங்கள் என்றும், பெற்றோர்களின் பொறுப்பின்மையே காரணம் என 16.17 சதவீதம் பேரும், 12.62 சதவீதம் பேர் மற்ற காரணங்கள் என்றும் பதில் அளித்திருந்தனர்.
பெரும்பாலான வாசகர்கள், சினிமாவின் தாக்கமே காரணம் என்று கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.