பணம் குடுக்க விடாம லோக்கல் அரசியல்வாதிகள் தொல்லை! – ரேஷன் பணியாளர்கள் புகார்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (13:36 IST)
தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகையை வழங்க விடாமல் உள்ளூர் அரசியல்வாதிகள் இடையூறு செய்வதாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவிற்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பை தொகுப்பும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் தொகுப்பு தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்குவது, பண விநியோகம் போன்றவற்றில் உள்ளூர் அரசியல் பிரமுகர் இடைஞ்சல் செய்வதாக முதல்வருக்கு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. எவ்வித இடையூறும் இல்லாமல் தங்கள் பணியை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்