கமல்ஹாசன் பிறந்த அன்று கனமழை பெய்ததால் அவரது தாயாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் கமல்ஹாசனின் தந்தை இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வழக்கறிஞராக பணிபுரிந்ததால் மன்னரிடம் அனுமதியுடன் அரண்மனை வைத்தியரால் கமல் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
சேதுபதி மன்னரின் அரண்மனையில் பிறந்ததால் கமல் சிறுவயதில் அடிக்கடி அரண்மனைக்கு சென்று வருவதுண்டு என்றும் தற்போது 40 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவர் அந்த அரண்மனைக்கு சென்று மன்னரிடம் தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து பெற செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை சேதுபதி மன்னரின் வாரிசுகள் உறுதி செய்துள்ளனர். மன்னர் மற்றும் ராணியின் ஆசியை பெறவுள்ள கமல்ஹாசன், அரியணையிலும் ஏறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்