காமெடி நடிகர் சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்

புதன், 17 ஜனவரி 2018 (13:09 IST)
விஜய் சந்தர் இயக்கம், விக்ரம் நடிப்பில் தமன்னா ஜோடியாகவும், ஸ்ரீமன் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விக்ரம் பேசும்போது, ‘கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து நடித்த படம் ஸ்கெட்ச். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர்  அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இந்த படத்தோட பர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற  பாடலோடத்தான் ஆரம்பிச்சது. 
 
இந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்டில் ஒருவராக என்ன கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட். சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான்தான். அதுக்காக சூரிகிட்ட நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவரிடம்  அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனசு பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும்  நடிக்க தயார். இல்ல இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி என்று கூறியுள்ளார் நடிகர் விக்ரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்