ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு, தங்கள் சார்பில் ஒரு தனியார் மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற துவங்கி விட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.