சுவாதியை யார் என்றே தெரியாது: வெளியே போனால் எல்லா உண்மையையும் சொல்லுவேன்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (12:51 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தற்கொலையை உறுதி செய்வதற்கான பிரேத பரிசோதனை பல்வேறு சர்ச்சைகளால் இன்னமும் நடத்தப்படவில்லை.


 
 
இதனால் அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறி சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் பலர். அதில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கு வாய்ப்பு உள்ளது என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
 
ராம்குமார் வெளியே வந்தால் தான் நிரபராதி மற்றும் காவல்துறையை பற்றி பேச வேண்டி வரும் என்பதால் கடைசி வரை ராம்குமாரை பேசவிடக்கூடாது என்பதற்காக அவரை கொலை செய்திருக்கலாம் என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
 
சிறையில் எப்பொழுதும் அமைதியாகவும், சோகமாகவும் இருக்கும் ராம்குமார் யாரிடமும் பேசுவதில்லை. சிறைக்காவலர்கள் கேள்வி கேட்டால் அதற்கு ஒரே வரியில் பதிலை முடித்து விடுவாராம்.
 
இந்நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியானதும், மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்பொழுது சகக்கைதி ஒருவர் ராம்குமாரிடம் பேசியது குறித்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் ராம்குமார் அவரிடம் என்ன பேசினார் என்பது தற்போது வெளியே வந்துள்ளது, இதன் காரணமாகவே ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் பேசி வருகின்றனர்.
 
கடந்த வாரம் ராம்குமார் மட்டும் தனியாக இருந்த போது திருநெல்வேலியை சேர்ந்த கைதி ஒருவர் ராம்குமாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவரிடம் பேசிய ராம்குமார் நான் சீக்கிரம் சிறையிலிருந்து வெளியே செல்ல வேண்டும், சுவாதி என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது, நான் வெளியே சென்று சுவாதி கொலையில் நான் எவ்வாறு சிக்க வைக்கப்பட்டேன் என்ற உண்மையை சொல்லுவேன் என்று கூறியுள்ளார்.
 
இதன் பின்னர் கடைசி வரை ராம்குமார் வெளியவே செல்லவில்லை, சிறையிலேயே மரணித்து விட்டார்.
அடுத்த கட்டுரையில்