தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பி களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து விரைவில் ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெற உள்ளது
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி களில் 4 எம்பிக்கள் திமுகவுக்கும் 2 எம்பிக்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுக தங்களுக்கு கிடைத்த நான்கு எம்பிகளில் ஒரு எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ள நிலையில் மீதமுள்ள மூன்று எம்பிக்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது
இதன்படி திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆறு மாநிலங்கள் உறுப்பினருக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ் குமார் மற்றும் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.