இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை. திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரஜினி தனது தர்பார் படத்திற்காக இப்போதே ப்ரமோஷனை துவங்கிவிட்டார் என பேசி வருகின்றனர். நேற்று தர்பார் மோஷன் போஸர் வெளியான நிலையில் அடுத்தடுத்து படம் குறித்த அப்டேட்டுகள் வர இருப்பதால் வழக்கம் போல் அரசியல் பேசி படத்தை ப்ரமோட் செய்ய ரஜினி துவங்கிவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.