ரயிலில் சிக்கிய வாலிபரை சாமர்த்தியமாக காப்பாற்றிய காவலர் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (16:26 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த வாலிபரை காவலர் ஒருவர் சாமர்த்தியமாக காப்பாற்றியுள்ளார்.


 

 
நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை - தாதர் இடையே செல்லும் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தார். அப்போது ஏற முடியமல் தவறி விழுந்தார். இதில் அவரது கால்கள் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே மாட்டிக் கொண்டது. இதைப்பார்த்த பணியில் இருந்த காவலர் ஒருவர் அந்த வாலிபரை பிடித்து இழுத்தார். இதனால் அந்த வாலிபர் உயிர் பிழைத்தார்.
 
இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

நன்றி: vikatan
அடுத்த கட்டுரையில்