கருணாநிதியை காண சென்னை வந்தார் ராகுல்!!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (11:31 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இன்று ​சென்னை வந்துள்ளார்.


 
 
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
 
கருணாநிதிக்கு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், நோய்த் தொற்று மற்றும் மூச்சு திணறலுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்