புழல் ஏரியில் திறக்கப்படும் உபரிநீர்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...
வெள்ளி, 11 நவம்பர் 2022 (12:12 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையின் முக்கிய நீர் நிலைகளான புழல் ஏரி செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை கிட்டத்தட்ட முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து புழல் ஏரியில் உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
புழல் ஏரியில் நீர் வரத்து ஆயிரம் கன அடியாக இருப்பதால் 100 அடியில் இருந்து 500 கனஅடி வரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன