என்ன கார் இருக்கு.. ஆனா ரோட்டை காணோம்! – வைரலாகும் புதுக்கோட்டையின் நூதன சாலை!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (15:07 IST)
புதுக்கோட்டையில் ஓரிடத்தில் சாலை அமைக்கும்போது கார் நிறுத்தப்பட்டிருந்த இடங்களை விட்டுவிட்டு சாலை போட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.



சமீப காலங்களில் சில ரோடு காண்ட்ராக்டர்களின் வேலைகள் காண்ட்ராக்டர் நேசமணி காமெடியை விட வைரலாகி விடுகிறது. ஆங்காங்கே திடீர் திடீரென சாலைகள் அமைக்கப்படும் நிலையில் அப்பகுதியில் உள்ள வாகனங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலை போடுவது பிரச்சினைக்குரிய பேசு பொருளாகியுள்ளது.

கடந்த ஆண்டு வேலூரில் ஒரு பகுதியில் இரவோடு இரவாக சாலை போட்டபோது சாலையோரம் நின்றிருந்த பைக்கை கூட அகற்றாமல் அதன் மேலும் தார் ஊற்றி சாலை அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போல வேறு சில சம்பவங்களும் நடந்தன.

தற்போது புதுக்கோட்டையில் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி கோவில் அருகே புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தாமல் அவற்றை சுற்றி இடைவெளி விட்டு விட்டு சாலையை போட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்