ஆண் கொசுவோடு இணைந்தாலும் வைரஸ் இல்லா குட்டி கொசு: புது உருவாக்கம்!

வியாழன், 7 ஜூலை 2022 (09:50 IST)
புதுச்சேரியில் ஆராய்ச்சி மையத்தில் சிக்குன்குனியாவை தடுக்கும் கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா பெண் கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆண் கொசுக்களுடன் இந்த புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாகும் கொசுவில் வைரஸ் இருக்காது. நான்கு ஆண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொசுக்களுக்கு வல்வாசியா (Wolbachia) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கொசுக்கள் அரசின் ஒப்புதலுக்கு பிறகு வெளியே விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை குறித்த விரிவான தகவலை விரையில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்