சென்னையில் மசாஜ் கிளப்களில் விபச்சாரம்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (06:32 IST)
சென்னையில் உள்ள பிரபல மசாஜ் கிளப்புகளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஐந்து தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
 
சென்னை வேளச்சேரி மற்றும் தியாகராயநகர் பகுதிகளில் செயல்பட்ட பிரபல மசாஜ் கிளப்களில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் போலீசார் அந்த கிளபுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்
 
ராஜேஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை குறிப்பிட்ட சில மசாஜ் கிளபுகளுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.
 
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக தரகர்கள் ஜான்சி என்கிற பூர்ணிமா, விஜய் கணேஷ், சதீஷ், புகழேந்தி, ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்