ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடியார் இல்ல.. கறார் பேர்வழி! – பிரேமலதா தாக்கு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (14:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பேசி வந்த நிலையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகி அமமுகவுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. அமமுகவில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்கள் பேட்டியில் அதிமுக கூட்டணி முறிவு குறித்து பேசிய அவர் “ஜெயலலிதா கூட்டணி கட்சியினரை நடத்துவது போல எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை, அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டணி பேசிவிட்டு இறுதியில்தான் எங்களை அழைத்தார்கள். 13 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சொன்னார்கள். 18 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். ஆனால் இவ்வளவுதான் முடியும் அதற்கு மேல் உங்கள் விருப்பம்போல செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள், அதனால்தான் கூட்டணி விட்டு வெளியேறினோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்