திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் என பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுகவும், அதிமுகவுக்கும் மக்கள் நலனில் எப்போதும் அக்கறை இல்லை. ஆனால் அக்கறை உள்ளதைப் போல் நடித்துக் கெண்டு இருக்கிறார்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் தான் இந்த தேர்தல், அவர்களுக்கு. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று ஆகும்.
கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் ஊழலும், லஞ்சமும் பெருகியுள்ளது. தமிழக மின்சாரத் துறையில் ரூ.25 ஆயிரம் கோடிக்கு மகா ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் டெபாசிட் இழப்பார்.
108 ஆம்புலன்ஸில் அதிமுகவினர் பணம் கடத்துகின்றனர். திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள் தான் என போட்டுதாக்கினார்.