காட்சிகளை நீக்குவது என்றால் சென்சார் எதற்கு? பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (19:32 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையரங்குகள் முன் போராட்டம் வெடிக்கும் என அதிமுகவினர் எச்சரித்ததால் வேறு வழியின்றி படக்குழு ஒருசில காட்சிகளை நீக்க சம்மதித்தது. அதன்பின்னர் மறுதணிக்கை செய்யப்பட்டு இன்று மாலை காட்சி முதல் புதிய பொலிவுடன் 'சர்கார்' அனைத்து திரையரங்குகளில் ஓடி வருகின்றது.

இந்த நிலையில் தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை நீக்க சொல்வது அநீதியானது என்று கமல், ரஜினி உள்பட பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும், ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை என்றும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.,

மேலும் தற்போது தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசு வெடித்திருந்தால் கொசுக்கள் அனைத்தும் அழிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, தனது வாக்கு சதவிகிதத்தை இழந்துவிட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்