ரஜினி நிறுத்தும் முதல்வர் வேட்பாளருடன் முடிந்தால் மோதிப்பார்: முக ஸ்டாலினுக்கு சவால்

திங்கள், 16 மார்ச் 2020 (19:26 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் தேர்தலில் கட்சி ஆரம்பித்து போட்டியிடப் போகிறோம் என்றும், ஆனால் தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும் தான் கைகாட்டும் ஒருவர்தான் முதலமைச்சர் என்றும் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்
 
இந்த நிலையில் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் ரஜினி ரசிகர்களிடையே பேசியபோது ’முதலமைச்சர் வேட்பாளராக பலரும் வரிசை கட்டி உள்ளனர். முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ், சீமான், கமல்ஹாசன், அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய பலர் முதலமைச்சர் கனவில் உள்ளனர் 
 
ஆனால் ரஜினிகாந்த் ஒரு இளைஞரை மக்கள் விரும்பும் ஒரு தலைவனை தேர்வு செய்ய விரும்புகிறார். அவர் தேர்வு செய்யும் முதலமைச்சர் வேட்பாளருடன் முடிந்தால் இந்த அனைவரும் மோதிப் பார்க்கட்டும் என்று பொன்ராஜ் சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்