போலீஸ் வாகனம் ஏற்படுத்திய விபத்து: பொதுமக்கள் சாலை மறியல்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (17:51 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனம் மோதி மீனவர் கால் முறிந்தது. இதனால பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே உள்ள ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்ற டார்வின் என்பவர் மீது காவல்துறையினர் வாகனம் மோதியது. 
 
இதில் டார்வினுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இச்செய்தியை அறிந்த டார்வினின் நண்பர்களும், உறவினர்களும் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
காயமடைந்தவரின் மருத்துவ செலவை காவல்துறையினர் ஏற்பதாக உறுதி அளித்தபின்னரே அவர்க‌ள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அடுத்த கட்டுரையில்