ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (13:25 IST)
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கியுள்ளது என்றும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
 
கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ரொக்க பரிசு அறிவிக்கப்பட உள்ளது என தெரிவித்த காவல்துறை, இதுவரை இந்த வழக்கில் 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
 
கடந்த 2012ஆன் ஆண்டு அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை கடந்த 10 ஆண்டுகளாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்