மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை ...சொத்து ஆவணங்கள் பறிமுதல் !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (20:50 IST)
மாஜி அமைச்சரும், தற்போதைய திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர்  மற்றும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டிலும் அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் வீடுகளில் திடீர் ரைடு., போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் அவர் மேல் இருந்தது. 
அதிமுகவில்,  இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி, 38 பேரிடம் பல லட்சம் பெற்று மோசடி செய்ததாக  மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது இன்று சென்னை 9,கரூரில் 5 , திருமலையில் 2  கும்பகோணத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. இதில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் வீட்டில் ஆவணங்கள், நகைகள், லேப்டாப்கள்,வங்கி காசோலைகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி பேங்க் ,லாக்க்கர்  ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியது.
 
மேலும், வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறி நபர்களிடம் பெற்ற சுயவிவர குறிப்புகள்  அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் 17 இடங்களில் சோதனை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்