தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ரூபாய் 4,01,92,619 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தகவல்.
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 3,85,436 நபர்கள் மீது வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதற்காக 4,07,895 நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,41,971 இருசக்கரம் மற்றும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, ரூபாய் 4,01,92,619 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.