புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு கசிவு.. சாலை மறியல் போராட்டம் செய்த பொதுமக்கள்..!

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (07:25 IST)
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷவாயு கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் விஷவாயு கசிந்து உள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி புதுநகர், கம்பன் மூகாம்பிகை நகர் பகுதியில் இன்று விஷவாயு வெளியேறியதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு வெளியேறியதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் இதனால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

போராட்டம் செய்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் இதே பகுதியில் தான் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான நிலையில் மீண்டும் அதே இடத்தில் விஷவாயு கசிந்து இருப்பதை எடுத்து பொதுமக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

விஷவாயு கசிவுக்கு  நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் கேட்டு வருகின்றனர். இது குறித்து அரசிடம் எடுத்து சொல்வதாக கூறி போராட்டம் செய்த பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்