18 வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் பிரதமர் மோடி "2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்" என்று பேசினார்.
மேலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
மேலும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 என்பது இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள் என்று கூறிய பிரதமர் மோடி, 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி எம்பியாக பதவியேற்ற பின்னர் மற்ற எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். இன்றும் நாளையும் புதிய எம்பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.