பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி: எச்.ராஜா சர்ச்சை பேச்சு

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:17 IST)
சபரிமலையில்  கோவில் பூஜை நாட்களில் பெண்கள் வருவதை எதிர்த்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தின் விளைவால் பத்திரிகையாளர் மற்றும் காவலர்கள் மீதான தாக்குதல்களும் நடந்தேறியது.
இதற்கு கருத்து கூறிய பினராய் விஜயன், கேரளாவில் இருக்கும் மலைவாழ் மக்களே பம்பை-நிலக்கல்-சபரிமலை பகுதியில் உள்ளனர் என்றும்,  போராட்டம் எனும் பெயரில் சபரிமலைக்கு கலங்கம் விளைவித்தவர்கள் நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளாகத்தான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில், தற்போது இதுகுறித்து பாஜக-வைச் சேர்ந்த எச்.ராஜா, சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய். பிரனாயி  ஒரு இந்தவிரோத சக்தி. மேலும், கேரளாவில் நிலைகொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியானது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்