பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (21:43 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள்  எச்சரித்துள்ளனர்.


 


 
பெட்ரோல் மீதான வாட் வரியை 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 25 சதவீதமாகவும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் மாநில தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். சேலம் மாவட்டம் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்