மாணவர்களின் போராட்டத்தை உடலுறவுடன் ஒப்பிட்டு பேசிய பீட்டா ஆர்வலர்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2017 (09:06 IST)
தமிழர்களின் கலாச்சார, பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அறப்போராட்டத்தை பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதாராஜன் மிகவும் கீழ்த்தரமாக உடலுறவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.


 
 
விலங்குகள் நல ஆர்வலரான ராதாராஜன் பிபிசி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில், தற்போது தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டால் 25000 பேர் வருவார்கள். ஆனால் இலவசமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என ஒரு தலைப்பு வைத்தால் அதற்கு 50000 பேர் கண்டிப்பாக வருவார்கள் என மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த அறப்போரட்டத்தை அதனுடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்தியுள்ளார்.
 
மேலும் பிரச்சனை என்றால் தெருவில் வந்து போராடுவது தான் மக்களின் உணர்வாக பிரதிபலிக்கிறது. இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் எல்லாத்தை விடவும் முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசோட செயல்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
 
900 மாடுகளை வரிசையில் நிற்க வைத்து ஓடவிடுவது எப்படி காட்சிப்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை, ஜல்லிக்கட்டை வைத்து அவர்கள் பணம் சம்பாதிப்பதிக்கிறார்கள். ஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடப்பது உண்மை.
 
மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்து விளையாடுவது அவர்களின் விருப்பம் ஆனால் அதில் காளைகள் விருப்பப்பட்டு வரவில்லை. இந்த ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என்றார்.
 
அடுத்த கட்டுரையில்