ரேசன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருளை பெறாதவர்கள் அதனை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது செப்டம்பர் 5 வரை பாமாயில், துவரம் பருப்பு பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பாமாயில் துவரம் பருப்பு அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது