ரேசன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், ரேசன் கடைகளில் தட்டுப்பாடு நிலவும் அளவிற்கு சீர்கெடச் செய்த திமுக அரசுக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.