ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அன்றைய தினம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆக.31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும். அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.