பெட்ரோல் & டீசல் விலையை மேலும் குறையுங்கள் - ஓபிஎஸ்!!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (17:03 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 100.94 எனவும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10  ரூபாயும் டீசல் விலை 10 ரூபாயும் அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசு பெட்ரோல் விலையை மேலும் ரூ.2 குறைக்கவும், டீசல் விலை ரூ.4 குறைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இதனை செய்யும்மாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்