போன வாரம் ஊழல் அரசு..இந்த வாரம் ஒரு தாய் மக்கள் - ஓ.பி.எஸ் அந்தர் பல்டி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி தற்போது இணைந்துள்ளது.


 

 
6 மாத கால போராட்டங்களுக்கு பின் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓ.பி.எஸ் அணி, இரு அணிகளும் இணைவதாய் அறிவித்துள்ளது. ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டனர். அதன் பின் பேசிய ஓ.பி.எஸ் “ நாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த எங்களை, ஜெயலலிதாவின் ஆன்மா எங்களை இணைத்துள்ளது” எனப் பேசினார்.
 
இதே ஓ.பி.எஸ் சென்ற வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது “ இந்த அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது” எனக் குற்றம் சாட்டினார். தற்போது ‘நாங்கள் ஒரு தாய் மக்கள்’ என்று பேசியிருக்கிறார்.
 
சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிப்பேசும் ஆற்றல் படைத்தவர்கள் அரசியல்வாதிகள் எனவும், அது போன வாரம்.. இது இந்த வாரம் எனவும் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாக கருத்து தெரிவித்து  வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்