ஓபிஎஸ் ஏரியாவை சுற்றி வளைக்க திட்டம்? – தென்மாவட்டங்களுக்கு எடப்பாடியார் பயணம்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:30 IST)
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவருக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் ஆதரவை திரட்டுவதற்காக சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தனக்கு அதிகம் செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ள தென் மாவட்டங்களை முதலில் கவர் செய்து தனக்கு ஆதரவை அங்கு அதிகப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்