மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகள் திட்டம்: என்ன காரணம்?
வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:26 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
இதனால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீண்டும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது
மழை குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது