தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

வியாழன், 3 நவம்பர் 2022 (07:58 IST)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று விடுமுறை அளித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: வெளுக்கும் கனமழை; சதுரகிரி செல்ல தடை! – பக்தர்கள் ஏமாற்றம்!

கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சதய விழா இன்று கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்