கருவூர் நகரத்தார் சங்கம் சார்பில் ''பிள்ளையார் நோன்பு"

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (15:48 IST)
உலகெங்கும் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் நோன்பான பிள்ளையார் நோன்பு விழா 13.12.2018 மாலை கருவூர் அழகம்மை மஹாலில் கொண்டாடப்பட்டது.
சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமை தாங்கினார் செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கினார். ஷோபிகா பழனியப்பன் மற்றும் குழந்தைகள் விநாயகர் அகவல் பாடினர். அகல்யா மெய்யப்பன் கரு.ரெத்தினம் ராமசாமி முத்தையா வழிபாட்டை நெறிப்படுத்தினர்.

சமூகப் பெரியவர்கள் வைரவன் கண.ராமையா இளை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் 400 பேர் எரியும் சுடரொடு இளை விளக்கினை விழுங்கி நோன்பு களைந்தனர் தொடர்ந்து வழிபாட்டில் வைத்து வழிபட்ட உப்பு ஒரு கிலோ 27000 ரூபாய்க்கும் வீடு, காமாட்சி விளக்கு, சட்டை சர்க்கரை, கல்கண்டு, ஸ்கூல் பேக் வாழைப்பழம், தேங்காய் என இருபத்து ஒரு மங்களப் பொருட்களை மேலை -பழநியப்பன் ஏலம் கோரி ஒரு லட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் ரூபாய் ஏலம் நடைபெற்றது சோமு அமர் ஜோதி ஆறுமுகம் மோகன்ராமையா பாலாறு குழுவாகச் செயல்பட்டனர்.

இத்தொகை கல்வி, திருமண உதவித் திட்டமாக சமுதாய மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்