ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக்கசிவு - அதிகாரிகள் இன்று ஆய்வு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (08:08 IST)
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டிருக்கும் அமிலக் கசிவை சீர் செய்ய அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன்பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதித்தது. 
 
இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அங்குள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். கடந்த 2016ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாகத்திற்கு அளித்த அனுமதியை  தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாபஸ் பெற்றது. 
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி கலெக்டர், சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மக்கள் பயப்படத் தேவையில்லை. இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
 
அதன் அடிப்படையில் இன்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உட்பட சிலர் இன்று இந்த கந்தக அமிலக் கிடங்கில் ஏற்பட்ட கசிவை சீர்செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்