வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு குறைவுதான்: வானிலை ஆய்வு மையம்..!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (11:59 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 23% குறைவாக பெய்து உள்ளது!

அக்டோபர் 1 முதல் இன்று வரை 227.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் 176.0 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

 வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக  சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை குறைவாக செய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இன்று காலை வரை அதாவது நவம்பர் 7 வரை இயல்பை விட 23 சதவீதம் வடகிழக்கு பருவமழை குறைவானது என்றும் அக்டோபர் 1 முதல் இன்று வரை 176 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பாக இந்த காலத்திற்குள் 227 மில்லி மீட்டர் மழை பதிவாக வேண்டும் என்றும் ஆனால்  176 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்