என்னவானது தேமுதிக? : சட்டமன்ற தேர்தலுக்கு பின் அப்டேட் இல்லை

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (16:07 IST)
தேமுதிவின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பின் எந்த பதிவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


 

 
சென்ற சட்டமன்ற தேர்தலிலும் சரி, அதற்கு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் சரி, விஜயகாந்தின் ஆதரவை பெற தமிழக மற்றும் தேசிய கட்சிகள் கடுமையான போட்டி போட்டன. ஏனெனில் தேமுதிகவிடம் 8-10 சதவிகித ஓட்டு வங்கி இருந்தது.
 
ஆனால், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேமுதிக சந்தித்த சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் மட்டுமில்லாமல் பெரும்பாலான தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 
 
அதன்பின் தேமுதிக என்கிற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்று நினைக்கிற அளவுக்கு அக்கட்சியில் செயல்பாடுகள் இருந்தது. அது, தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலும் எதிரொலித்துள்ளது. அந்த இணையதளத்தில், கடந்த மே மாதம் 14ம் தேதி  அக்கட்சி தொடர்பான கடைசி பதிவு இடப்பட்டுள்ளது. அதன் பின் தற்போது வரை அதில் எந்த பதிவும் இல்லை. 
 
இது, தேமுதிக தொண்டர்களை மேலும் தொய்வடைய செய்யும் விவகாரமாகவே கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்