மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? சுகாதார செயலாளர் பேட்டி!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்றும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி தான் என்றும் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
நேற்று திருவள்ளூரில் இதுகுறித்து ஆய்வு செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் மாஸ் அணிவதை சரிவர கடைப் பிடிக்கவில்லை அதனால் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஆகிறது 
 
வேலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் சேலம் ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. இருப்பினும் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் அது குறித்த எந்த ஆலோசனையும் தமிழக அரசு செய்யவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்