6 மணி நேரம் க்ளாஸ்... 45 நாட்களுக்கு நோ ஹோம்வெர்க்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (08:15 IST)
பள்ளி திறந்ததும் முதல் 40 முதல் 45 நாட்கள் புத்துணர்ச்சி பாடங்கள் தான் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் என தகவல். 
 
தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
வாரத்திற்கு 6 நாட்கள் வீதம் ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை 6 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. இதில் உடற்கல்வி வகுப்புகள் கிடையாது. 
 
பள்ளி திறந்ததும் முதல் 40 முதல் 45 நாட்கள் புத்துணர்ச்சி பாடங்கள் தான் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும். இந்த நாட்களில் வீட்டுப்பாடம் எழுத வைக்கப்போவது இல்லை.
 
இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கி உள்ள நிலையில் விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்