தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. .திரையரங்குகள், அழகு நிலையம் மூட உத்தரவு !

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (18:25 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் கீழ் 26-04-21அதிகாலை 4 மணிக்கு முதல் புதிய கட்டுப்பாடுஅக்ள் விதிக்கப்படுகின்றன.

அதில், அனைத்துத் திரையரங்குகள்,உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து மதுக் கூட்டங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்கங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

பெரிய கடைகள்,வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை; மளிகை காற்கறிக்கடைகள் மற்றும் இதர அனைத்துக் கடைகளும் உரிய வழிமுறைகள் பின்பற்றி வழக்கம் போல் செயல்படும் அனுமதி அளிக்கப்படுகிறது.

வணிகவளாகத்தில் உள்ள காற்கறிக் கடைகள், பலசரக்கு கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாகச் செயல்படும் காய்கறிக் விற்பனை கடைகள் பெரிய கடைகள் குளிர்சாதனை வசதி இன்று இயங்கும்.  இவற்றில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கே அனுமதி அளிக்க வேண்டும்.

சென்னை மாநகாரட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள்,  சலூன்கள், இயங்க அனுமதி இல்லை

அனைத்து உணவகங்கள் மற்றூம் தேரீர்க் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஹாஸ்டலில் தங்கியுள்ளவர்களுக்கு அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்ம்….உணவுக் கூடத்தில் உணவுண்ண அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்